கேள்வி பதில்

கீறிக் கிழிக்கும் விலங்குகளை உண்பது ஹராம் என்று  நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹலாலான விலங்கையும் ஹராமான விலங்கையும் கண்டறிவது  எப்படி?
சுறா, திமிங்கிலம் போன்றவை ஹலாலா? டால்பின் பன்றி இனத்தைச் சேர்ந்தது. எனவே அது ஹலாலா? கடலில் உள்ள அனைத்தும் ஹலால் என்றால் பாம்பு, முதலை, ஆமை போன்றவை எப்படி
விலங்கினங்களைப் பொறுத்த வரை பன்றி  பற்றி  குர்ஆனில் (2:173, 5:3, 6:145, 16:115) கூறப்பட்டுள்ளது. வீட்டுக் கழுதை ஹராம் என்று புகாரி 4217, 4215, 4199, 3155, 4218, 4227, 5115, 5522, 5527, 5528 ஆகிய ஹதீஸ்கள் கூறுகின்றன. புகாரி 4215வது ஹதீஸில் வீட்டுக் கழுதை ஹராம் எனவும் குதிரை ஹலால் எனவும் கூறப்பட்டுள்ளது.
இவை தவிர மற்ற விலங்கினங்களைப் பற்றி எவ்வாறு  முடிவு  செய்வது  என்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொதுவான அளவுகோலை நம் முன்னே வைத்துள்ளனர். 
விலங்கினங்களில் எவற்றுக்குக் கோரைப் பற்கள் உள்ளனவோ  அவற்றை  உண்ணக் கூடாது என்று நபிகள் நாயகம்(ஸல்) தடை செய்தார்கள். 

அறிவிப்பவர்: அபூ ஸலமா(ரலி), நூல்: புகாரி 5781, 5530.
மேற்பகுதியில் உள்ள பல் வரிசையின் முன் பற்களில் நான்கு பற்களுக்குப் பின் உள்ள பல் கோரைப் பல் எனப்படும்.

சஜ்தா ஓர் விளக்கம்


 பின்னர் நாம் மலக்குகளை நோக்கி ஆதமுக்கு ஸஜ்தா செய்யுங்கள்! என்று சொன்ன போது இப்லீஸித் தவிர மற்ற அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அவன் மறுத்து அகந்தை பேசினான். நிராகரிப்பவர்களில் ஒருவனாக அவன் ஆனான். (அல்குர்ஆன்2:34)

இந்த வசனத்தில் கூறப்படும் செய்தி எல்லா  முஸ்லிம்களுக்கும்  தெரிந்த ஒன்றே. மலக்குகள் எனும் வானவர்கள் முதல் மனிதராகிய   ஆதம் (அலைஅவர்களுக்கும்  ஸஜ்தா செய்ததாக  இந்த வசனம் கூறுகின்றது இந்தக் கருத்து திருகுரானிலும் இன்னும் அனேக இடங்களில் கூறப்படுகின்றது.

15:30,37:73,7:11,17:61.18:50,20:11 ஆகிய வசனங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த வசனங்கள் பற்றி ஏகத்துவவாதிகளுக்கு இடையே ஒரு குழப்பம். இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய வேண்டும் எனும் போது வானவர்களும் கூட இறைவனுக்கு மட்டுமே ஸஜ்தா செய்ய கடமைப்பட்டு இருக்கும் போது அவர்கள் ஏன் ஆதமுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும்? அவ்வாறு செய்யுமாறு இறைவன் ஏன் கட்டளையிட வேண்டும்? இந்தக் கேள்விகளால் அவர்களுக்கிடையே குழப்பம்.

ஏகத்துவத்துக்கு எதிரானவர்களுக்கோ இந்த வசனம் ஒரு வரப்பிரசாதம். ஆதம் அவர்களுக்கு மலக்குகள் ஸஜ்தா செய்ததால் பெரியவர்களுக்கு மகான்களுக்கு சாதாரணமானவர்கள் ஸஜ்தா செய்யலாம் என வாதிடுவோருக்கு இந்த வசனமும் இந்தக் கருத்திலமைந்த  ஏனைய வசனங்களும் மிகப் பெரும் சான்றுகளாகத்  தெரிகின்றன.

இரண்டிலும் சேராதவர்களுக்கோ தடுமாற்றம்! எங்கே சாய்வது என்று தீர்மானிக்க முடியாதது அவர்களது நிலைமை. இஸ்லாத்திலேயே முரண்பாடுகள் உள்ளனவோ என்ற எண்ணத்தைக் கூட சிலர் இதனால் தங்கள் அடி மனதில் புதைத்து வைத்திருக்கின்றார்கள். இதன் காரணமாக இந்த வசனம் பற்றி முழுமையாக அறிந்து கொள்வது மிகவும் அவசியமாகி விடுகின்றது.

சமாதி வழிபாடு சாபத்திற்குரிய செயல்

சிலை வழிபாட்டைத் தடுத்த இஸ்லாம்சிலை வழிபாட்டின் பக்கம் கொண்டு சேர்க்கும் காரியங்களான சிலை வடித்தல்,உருவப்படங்களை வரைதல்உருவப்படங்களை மாட்டி வைத்தல்சிலைகளை விற்பனை செய்தல் போன்ற அனைத்து வாயில்களையும் அடைத்து வைத்துள்ளது என்பதையும் அறிவோம்.
நபியவர்கள், "இறைவா! என்னுடைய கப்ரை வணங்கப்படும் விக்கிரகமாக மாற்றி விடாதே'' என்று கூறிய ஹதீஸிலிருந்து உருவமாக இருந்தால் மட்டும் சிலை வழிபாடு என்று கூறப்படாது. மாறாக எந்த ஒரு பொருள் நமக்கு நன்மையை ஏற்படுத்தும்தீமையைத் தடுக்கும் என்று எண்ணி அதற்கு எந்த வழிபாட்டைச் செய்தாலும் அதுவும் சிலையாகத் தான் கருதப்படும் என்பதற்குரிய சான்றுகளையும் பார்த்தோம்.
சமாதி வழிபாட்டின் பக்கம் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாசல்களையும் இஸ்லாம் அடைத்திருக்கின்றது.

அதில் மிக முக்கியமானது சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்குவதாகும். இது பற்றி விரிவாகக் காண்போம்.

பள்ளிவாசல் என்றால் என்ன?

இன்றைக்கு முஸ்லிம்கள் பாங்கு சொல்லி ஐங்காலத் தொழுகைகளை  ஜமாஅத்தாக நிறைவேற்றும் இடத்திற்குப் பள்ளிவாசல்கள் என்று  குறிப்பிடுகின்றனர். இதன் காரணமாகத் தான் தர்ஹா வழிபாட்டைக் கண்டித்து உரையாற்றும் போது நாம் "யூத கிறிஸ்தவர்களின் மீது  அல்லாஹ்வின் சாபம் ஏற்பட்டு விட்டது. அவர்கள் தங்களின் நபிமார்களின் சமாதிகளையெல்லாம் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டனர்'' என்ற ஹதீஸைக் குறிப்பிடும் போது தர்ஹா  வழிபாட்டை  ஆதரிப்பவர்கள்,  நாங்கள் சமாதிகளைப் பள்ளிவாசல்களாக ஆக்கவில்லை.   பள்ளிவாசல்களில் பாங்கு கூறுவார்கள். நாங்கள் சமாதிகளில் பாங்கு கூறவா செய்கிறோம் பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத்  தொழுகிறார்கள். நாங்கள் சமாதிகளில் ஜமாஅத்தாகத் தொழவா செய்கின்றோம்?' என்பது போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர். களியக்காவிளை விவாதத்தின் போது கூட சில கோமாளிகள் இது போன்ற வாதங்களை எடுத்து வைத்தனர்.

இமாம்களின் மத்ஹப் எது?




மத்ஹப் கிதாபில் உள்ள அறிவுரை
நாம் வஹியை மட்டும்தான் பின்பற்ற வேண்டும். வஹி என்பது   அல்குர்ஆனும் நபி வழியும் மட்டுமே. ஸஹாபாக்கள் எந்த மத்ஹபையும்   பினபற்றவில்லை. இமாம்களும்  எந்த மத்ஹபையும் பின்பற்றவில்லை. அவர்கள் அனைவரும் அல்குர்ஆனையும் ஹதீஸையும் தான் பின்பற்றச் சொல்லியுள்ளனர். அதனால்தான், இமாம் அபூ யூஸூஃப், இமாம் முஹம்மத் ஆகிய இரு மாணவர்களும் மூன்றில் இரு பங்கு சட்டங்களுக்கும் அதிகமாகத் தமது ஆசிரியரான அபூ ஹனீபா (ரஹ்) அவர்களுக்கு  முரண்படுகின்றனர். (துர்ருல் முக்தார் பாகம்: 1 பக்கம்: 64)


இமாம்களின் பிறப்பு – இறப்புக் காலக் குறிப்பைப் பாருங்கள்.
இமாம்கள் பிறப்பு (ஹிஜ்ரி) இறப்பு (ஹிஜ்ரி)
இமாம் அபூஹனீஃபா 80 150
இமாம் மாலிக் 93 179
இமாம் ஷாஃபியீ 150 204
இமாம் ஹன்பல் 164 241
இமாம் ஷாஃபியீ அவர்கள், மாலிக் இமாமின் மாணவர் ஆவார். அதுபோலவே, ஷாஃபியீ இமாமின் மாணவரே ஹன்பல் இமாம் அவர்கள். இவர்களுள் யாரும் தமது ஆசிரியர்களைப் பின்பற்றவுமில்லை;, எந்த ஆசிரியரும் தமது  மாணவர்களை  தங்களைப் பின்பற்றுமாறு வற்புறுத்தவுமில்லை. அவற்றிற்கான ஆதாரங்களை நோக்குவோம்.